/* */

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை திறப்பால் திருவண்ணாமலைக்கு வெள்ள எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை திறப்பால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை திறப்பால் திருவண்ணாமலைக்கு வெள்ள எச்சரிக்கை
X

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது (பைல்படம்)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 2-ந் தேதி நீர்வரத்து 12 கனஅடியாக இருந்த நிலையில் தொடர் மழையால், காலை நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக அதிகரித்து ள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

பொதுவாக அணையின் நீர்மட்டம் 48 அடியை எட்டினால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். தற்போது 50 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் இன்றுகாலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

தற்போது அணைக்கு வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த நீரை அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதிகளவு தண்ணீர் வருவதால் தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, கரையைக் கடந்து மறுபுறம் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 May 2022 12:03 PM GMT

Related News

Latest News

  1. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  8. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...