/* */

அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.45.50 லட்சம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.45 லட்சத்து 46 ஆயிரத்து 436 பெறப்பட்டது.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.45.50 லட்சம்
X

அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இருப்பினும் மற்ற நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மேலும் கடந்த மாதத்தில் இருந்து வாரத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்திருந்தது.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பணியை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில் உண்டியல் காணிக்கையாக 263 கிராம் தங்கம், 728 கிராம் வெள்ளி, ரூ.45 லட்சத்து 46 ஆயிரத்து 436 பெறப்பட்டது.

Updated On: 1 Sep 2021 1:37 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  5. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு