/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 123.6 மிமீ மழை பதிவாகியுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் இருந்து அதிகாலை 5 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது..

ஆரணி நகரிலும் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் பெய்த மழையால் ஆரணி கோட்டை வடக்கு பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி ராஜா என்பவரது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ராஜா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர் மழையால் குங்கிலிய நத்தம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. .

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 123.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதியில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு,

செய்யாறு- 65, போளூர்- 56.4, செங்கம்- 47.4, சேத்துப்பட்டு- 37.6, ஆரணி மற்றும் திருவண்ணாமலை- 32, கீழ்பென்னாத்தூர்- 20, தண்டராம்பட்டு- 10.4, ஜமுனாமரத்தூர்- 7, வெம்பாக்கம்- 2

Updated On: 3 Sep 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!