/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
X

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். இதில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 600 க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் வெங்கடேசன், தாட்கோ மேலாளா் ஏழுமலை, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, பழங்குடியினா் நலத் திட்ட இயக்குநா் செந்தில்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கந்தன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தான் எழுதிய தான செட்டில்மெண்டை ரத்து செய்யக் கூறி மனு கொடுத்த மூதாட்டி

திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 75 வயது அலமேலு , என்ற மூதாட்டி குறை தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி நல்ல நிலையில் உள்ளனர். இந்த நிலையில் எனக்கு சாப்பாடு போடுவார்கள், துணிகள் எடுத்து கொடுத்து நல்ல நிலையில் வைத்திருப்பார்கள் என்று நினைத்து அவர்கள் கேட்டதன் பேரில் எனக்கு சொந்தமான இடத்தை 2021-ல் தானசெட்டில்மெண்ட் எழுதி வைத்தேன்.

சில மாதங்கள் சாப்பாடு போட்டு துணி எடுத்து கொடுத்தனர். ஆனால் தற்போது சாப்பாடு போடுவதில்லை. துணி எடுத்து தருவதும் இல்லை. வீட்டில் சேர்க்க மறுக்கின்றனர். இதனால் மனம் உடைந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் யாசகம் எடுத்து பிழைத்து வருகிறேன். எனவே அந்த தானசெட்டில் மெண்ட்டை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர்உத்தரவிட்டார்.

விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஆட்சியர்'அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள் தரையில் அமர்ந்து கைகளை துண்டால் பின்புறம் கட்டி கொண்டு, வாழையிலையில் சாப்பாடு வைத்து சாப்பிட முடியாமல் தவிப்பது போன்று செய்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து புருசோத்தமன் கூறுகையில், 2023-24-ம் ஆண்டின் வேளாண் திட்ட கையேடு கடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வழங்கப்பட்டது. வேளாண்மையை சார்ந்த துறைகளான நீர்வள- நிலவள திட்டம், தோட்டக்கலைதுறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை வளர்ப்பு துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள் குறித்து கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

எனவே அக்டோபர் முதல் வாரத்தில் அனைத்து துறைகள் இணைத்த திட்ட கையேடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பேச பெயர் பதிவு செய்தும் பேச முன்னுரிமை வழங்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றார்.

பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்தனர்.

Updated On: 26 Sep 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.