/* */

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள், ஏரிக் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்

HIGHLIGHTS

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
X

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். வேளாண் இணை இயக்குநா் ஹரிக்குமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து எடுத்துக் கூறினர். அப்போது கூட்டத்தில் பேசிய விவசாயிகள் கூறுகையில்,

பருவமழை தொடங்க உள்ளதால் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து இருக்கும். ஏரிகளின் நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் முறையாக ஏரிகளுக்கு நீர் சென்றடையாது. எனவே நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்.

பி.எம்., கிஸான் திட்டத்தில் நிதிப்பயன் பெறுதலில் விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதிப்பயன் கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு நிதி வழங்குதல், மானியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு யூரியா உரங்களை விலை உயர்த்தப்படாமல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வேளாண் துறையில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகள் கடன் பெற விண்ணப்பித்தால் அவர்களின் மனு குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களிலும் மின்னனு எடை மேடை மூலம் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்ய உள்ளனர். பல்வேறு விளைநிலங்களில் தாழ்வாக மின் ஒயர்கள் செல்கிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்வாரியம் இந்த ஒயர்களை உயர்த்தி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துக் கூறினர்.

பின்னர் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கையில் , விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர்..

தொடர்ந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேட்டினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டார்.

கூட்டத்தில், கால்நடைத் துறையின் மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, மாவட்ட பழங்குடியினா் நலத்திட்ட அலுவலா் செந்தில்குமாா், முன்னோடி வங்கி மேலாளா் கெளரி மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 27 Oct 2023 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  2. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  3. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  4. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  5. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  6. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!