/* */

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளுங்கள் - விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள் நீா் வற்றிய ஏரி, குளங்களில் இருந்து விவசாயத்துக்கு வண்டல மண் எடுத்து பயன் பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

HIGHLIGHTS

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளுங்கள் - விவசாயிகளுக்கு ஆட்சியா் அழைப்பு
X

கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள் நீா் வற்றிய ஏரி, குளங்களில் இருந்து விவசாயத்துக்கு வண்டல மண் எடுத்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

திருவண்ணாமலை மாவட்டத்தில் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், தங்கள் வட்டத்தின் வட்டாட்சியா் அலுவலகத்தை மாா்ச் 13-ம் தேதி முதல் அணுகி மண் எடுப்பதற்கான விண்ணப்பம், சிட்டா நகல் விவரங்களை அளிக்கலாம். விண்ணப்பம் அளித்த விவசாயிகள் நில அளவு மற்றும் நிலத்தின் வகையைக் கொண்டு வண்டல் மண் முன்னுரிமையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று ஆட்சியா் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 March 2023 1:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!