/* */

மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

283 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கலெக்டர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.

HIGHLIGHTS

மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
X

பயனாளிகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கிய கலெக்டர் முருகேஷ்

283 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவன நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 283 மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு ரூ.11 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலைத் திருவிழா நடத்தப்பட்டது.

இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 48 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

ஆதரவற்ற கிறிஸ்தவ விதவைகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள கிறிஸ்தவ மகளிர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் கறவை மாடு, ஆடு வளர்த்தல், பெட்டிக்கடை மற்றும் பூக்கடை போன்ற சுய தொழில் புரிய 76 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிக்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

மேலும் கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்த செல்வி என்பவருக்கு கறவை மாடு வாங்க ரூ.30 ஆயிரமும், ஆரணி தாலுகா வேலப்பாடி கிராமம் இலங்கை முகாமில் வசிக்கும் யூட்கலிஸ்டா தர்மினி என்பவருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.26 ஆயிரத்து 900-ம் நிதியினையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமரன், ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் எலிசபெத் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தன

Updated On: 4 April 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...