/* */

நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்.

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் படிப்பினை தொடர முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் படிப்பினை தொடர முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது ஒரு ஆண்டில் ஒருமுறை மட்டும் தலா ரூ.50 ஆயிரம் வழங்க அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றைச்சாளர முறை வழியாக சேர்க்கை பெற வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் நிதியுதவி தொகை பெற இயலாது.

தமிழ்நாட்டில் இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முதல் பட்டதாரி சலுகை பெற்றிருப்பினும் தொழிற்கல்வி பயில இயலாத மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு தொழில் கல்வி உதவித்தொகை வழங்க மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்டு, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து சிறப்பினமாக கருதக்கோரும் கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறையால் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும். ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் உதவித்தொகை சென்று சேரும் வகையில் மக்கள் குறை தீர்க்கும் நாள், மக்கள் தொடர்பு முகாம்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான நிரந்தர சான்று, குடும்ப தலைவரின் ஆண்டு வருமான சான்று, குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வி தகுதி மற்றும் வருமான சான்று, ஒற்றைச்சாளர முறை வழியாக சேர்க்கை பெற்றதற்கான சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றை மக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் சம்பந்தப்பட்ட தனி தாசில்தார்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 April 2022 12:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்