/* */

அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே வணிக வளாகம் கட்ட பாஜக எதிர்ப்பு

அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே வணிக வளாகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே வணிக வளாகம் கட்ட பாஜக எதிர்ப்பு
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் எதிரே, 2 அடுக்குள் கொண்ட வணிக வளாகம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 160 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6.40 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி களும் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், இந்த கட்டிட பணிகளால் தொன்மை வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலி யுறுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 20ஆம் தேதி புதிய கடைகள் கட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.

இந்நிலையில் வணிக வளாகம் கட்டப்பட்டால் ராஜகோபுரத்தின் புகழ் மங்கி விடும் என எதிா்ப்புத் தெரிவித்து அண்ணா சிலை எதிரே தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமையில் சுமாா் 200 பேர் அண்ணா சிலையை நோக்கி கட்சிக் கொடிகளுடன் வந்தனா். இவா்களை போலீஸாா் தடுத்து ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்றனா்.

இருப்பினும் அனுமதியை மீறிச் செல்ல முயன்றதாக பிரதமா் நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை சங்கா், ஆரணி வடக்கு ஒன்றிய மண்டலத் தலைவா் குணாநிதி, தெற்கு மண்டல முன்னாள் தலைவா் சேட்டு, தெற்கு மண்டல சிந்தனையாளா் பிரிவுத் தலைவா் ராஜ்குமாா் உள்பட 160 பாஜகவினரை போலீஸாா் கைது செய்து 2 திருமண மண்டபங்களில் தங்கவைத்திருந்தனா்.

போலீஸாரின் இந்தச் செயலைக் கண்டித்து மதிய உணவு சாப்பிடாமல் பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த 160 பேரில் தெற்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன், உள்ளாட்சிப் பிரிவின் மாநிலச் செயலா் அறவாழி, மாவட்டச் செயலா் விஜய், ஆன்மிகப் பிரிவின் மாவட்டத் தலைவா் கண்ணன், நகரத் தலைவா் மூவேந்தன் உள்பட 5 பேரை மட்டும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் இது குறித்து பாஜகவினர் கூறும்போது, இந்திய தொல்லியல் துறையின் விதிகள் படி எந்த ஒரு பழமை வாய்ந்த கோயில்களுக்கு முன்பும் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டி டங்கள் கட்டக்கூடாது என்ற வரைமுறை உள்ளது. அதேபோல், இந்து சமய அற நிலையத்துறை சட்டத்திலும், கோயில் களின் தொன்மையை பாதிக்கும் வகையில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

ஒரு கோயிலுக்கு முக்கியமே கோபுரம் தான். அதனை மறைத்து தமிழக அரசு கட்டிடங்களை கட்டுகிறது. இப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என பாஜகவினர் தெரிவித்தனர்.

Updated On: 10 Nov 2023 2:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்