/* */

அண்ணாமலையார் திருக்கோவிலில் 8ம் நாள் வசந்த உற்சவ விழா

அண்ணாமலையார் திருக்கோவிலில் 8 ம் நாள் வசந்த உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் திருக்கோவிலில் 8ம் நாள் வசந்த உற்சவ விழா
X

வசந்த உற்சவ நிகழ்ச்சியில், அண்ணாமலையார் மீது பொம்மை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த, வைகாசி மாதத்தில் விசாக விழா, ஆனி மாதத்தில் ஆணி பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திக்கை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, என ஆண்டு தோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவிழாக்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும்.

அந்த வகையில் சித்திரை வசந்த உற்ச விழாவிற்கான பந்த கால் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டு வருடப்பிறப்பு 14 ஆம் தேதி அன்று தொடங்கிய வசந்த உற்சவ விழா வருகின்ற 23 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று நிறைவடைய உள்ளது.

வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு விழாவின் 8 ம் நாளான நேற்று இரவு அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள மகிழ மரத்தை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் அருகே உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுடன் உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வு நடைபெற்றது.

நிறைவு நாளான இன்று இரவு பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவருக்கு பொம்மை குழந்தை பூ கொட்டும் நிகழ்வுடன் இரவு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

தொடர்ந்து உற்சவத்தின் பத்தாவது நாளான நாளை 23 ஆம் தேதி அன்று ஐயங்குல தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீ கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி, மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர்கள் மற்றும் இணை ஆணையர், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Updated On: 22 April 2024 1:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...