/* */

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரயில் மூலம் வந்தடைந்த 1,461 மெட்ரிக் டன் யூரியா

திருவண்ணாமலை மாவட்ட விவசாய தேவைக்காக 1461 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரயில் மூலம் வந்தடைந்த 1,461 மெட்ரிக் டன் யூரியா
X

ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட யூரியா

திருவண்ணாமலை மாவட்ட விவசாய தேவைக்காக 1461 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு, உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போது பின் சம்பா பருவ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பாசன கிணறுகள், ஏரிகள், அணைகளில் நீர் இருப்பு உள்ளதால், பின் சம்பா பருவ நெல் சாகுபடி மாவட்டம் முழுவதும் பரவலாக நடக்கிறது. அதையொட்டி, விவசாய தேவைக்கான 1461 மெட்ரிக் டன் எம்எப்எல் யூரியா மணலியில் இருந்து ரயில் மூலம் நேற்று திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், லாரிகள் மூலம் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், யூரியா 11,127 மெட்ரிக் டன், டிஏபி 1154 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1474 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 404 மெட்ரிக் டன், மற்றும் காம்ப்ளக்ஸ் 7072 மெட்ரிக் டன் உரங்கள் தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் உரவிற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி, பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் ஹரகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், அரசு நிர்ணயித்த விலைக்கு அதிமாக விற்பனை செய்யக்கூடாது. அதோடு, விற்பனை முனையக்கருவி பயன்படுத்தி மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்கள் மற்றும் உரங்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், யூரியா போன்ற உரங்களை விவசாயம் அல்லாத பிற தொழில்களுக்கு பயன்படுத்துதல் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். எனவே, இது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Updated On: 19 Jan 2024 12:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்