/* */

செய்யாறில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட முயற்சி

செய்யாறில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

செய்யாறில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட முயற்சி
X

கோவில்களில் திருட முயற்சி (கோப்பு படம்)

செய்யாறில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்யாறு திருவத்திபுரம் மேற்கு மாடவீதியில் பிரசித்தி பெற்ற வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கோயில் உண்டியலை உடைத்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை திருடி சென்றனர்.

பின்னர் கோவில் அறையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லாக்கரையும் உடைத்துள்ளனர். ஆனால் விநாயகருக்கு அணிவிக்கப்படும் தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கோவில் நிர்வாகியின் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்ததால் பல லட்சம் மதிப்பிலான ஆபரணங்கள் தப்பின.

அதேபோல கிழக்கு மாவடவீதியில் கூட்டுறவு வங்கி அருகில் உள்ள மூர்த்தி விக்னேஸ்வரர் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில்களிலும் பூட்டுகளை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

செய்யாறு டவுன் திருவத்தூரில் கிழக்கு மாடவீதியில் மூர்த்தி விக்னேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த கோவிலின் கேட்டை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்துள்ளனர். பின்னர் அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை திருடி சென்றனர்.

வீரஆஞ்சநேயர் கோவில், பூட்டுகள் உடைக்க முடியாமல் போனதால் கோவில் உண்டியலில் இருந்த காணிக்கை மற்றும் ஆபரணங்கள் தப்பின.

ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக செய்யாறு பகுதியில் கோவில்களில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 25 March 2023 2:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!