மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர் ரிலாக்ஸ்

மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர் ரிலாக்ஸ்
X

Tirupur News- நூல் விலையில் மாற்றம் இல்லை. (கோப்பு படம்)

Tirupur News- மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை என நூற்பாலைகள் அறிவித்துள்ளதால், பின்னலாடை தொழில் துறையினர் ரிலாக்ஸ் ஆக உள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- மே மாதத்திற்கான நூல் விலை மாற்றம் இல்லாமல் கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளது.

பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.

நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. நடப்பு மாதத்திற்கான (மே) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர்.

இதில் கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 30 எண்ணுக்கு அதிகமான நூல் வகைகள் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத விலையில் குறைப்பு இல்லை என்றாலும் நடப்பு மாதத்தில் விலை ஏறாமல் இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

இதன்படி (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202க்கும், 20-வது நம்பர் ரூ.260-க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர், ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!