கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!

கைவிட்ட தனியார் நிறுவனம் :  பாஜவில் ஒரே புலம்பல்..!
X

பாஜக தேர்தல் பணி (கோப்பு படம்)

பா.ஜ.க.,வுக்கு தேர்தல் வேலை செய்த தனியார் கம்பெனி, பல குளறுபடிகளை செய்து விட்டதாக அக்கட்சியினர் புலம்புகின்றனர்.

ஆளும் தரப்புக்கு ஒரு கம்பெனி வேலை பார்த்ததைப் போல, தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கும் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம், தேர்தல் வேலைகளைப் பார்த்திருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள் அவர்கள். வெற்றிபெற வாய்ப்பிருக்கும் தொகுதிகளை ‘ஏ’ எனவும், இழுபறியாக இருக்கும் தொகுதிகளை ‘பி’ எனவும், வாய்ப்பே இல்லாத தொகுதிகளை ‘சி’ எனவும் கேட்டகரைஸ் செய்து கொடுத்ததோடு, அங்கே வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என்பதுவரை ஆலோசனை சொன்னதும் இந்த கம்பெனி தான் என்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

ஆனால், அவர்கள் கொடுத்த தரவுகளும் ஐடியாக்களும் களத்தில் எடுபடாமல் போய் விட்டனவாம்.”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன... தேர்தல் முடிந்த கையோடு அடையாறில் இருந்த தனது அலுவலகத்தைக் காலி செய்து விட்டு மீண்டும் பெங்களூருக்கே சென்று விட்டது, அந்த நிறுவனம். அங்கிருந்து கர்நாடகா தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார்கள். தமிழக தேர்தல் பணிக்காக, அவர்கள் தற்காலிகமாக வேலைக்கு எடுத்தவர்கள் பலருக்கும் இறுதிக்கட்ட செட்டில்மென்ட் செய்யவில்லை எனப் புலம்பல் ஒலி கேட்கிறது.

தேர்தல் வேலைக்காகப் பயன்படுத்தப்பட்ட டிராவல்ஸ் கம்பெனிகளும் புலம்புகின்றன. அது மத்திய அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் கம்பெனி என்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைகிறார்களாம் கமலாலய நிர்வாகிகள்.

Tags

Next Story
highest paying ai jobs