என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?

என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
X

முன்னாள் திமுக அமைச்சர் செந்தில்  பாலாஜி (கோப்பு படம்)

செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய மனுவில், பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது அமலாக்கத்துறை.

நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, ‘320 நாள்களுக்கு மேல் சிறையில் இருக்கிறேன். வழக்கை தாமதம் செய்வதற்காகவே, கடைசி நிமிடத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்கிறது அமலாக்கத்துறை’ எனக் கொதித்திருக்கிறது செந்தில் பாலாஜி தரப்பு. இந்தத் தாமதத்துக்கு அமலாக்கத்துறை தரப்பில் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள்.

மே 18-ம் தேதியிலிருந்து ஜூலை 7-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்துக்குக் கோடைக்கால விடுமுறை. எனவே, மே 6-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், மேலும் ஒன்றரை மாதம் அவர் காத்திருக்க நேரிடலாம். இதற்கிடையே, தான் ஜாமீனில் விடுதலையானால், அடுத்த 100 நாள்களில் தான் செய்ய வேண்டிய விஷயங்களையெல்லாம் பட்டியல் போட்டிருக்கிறாராம் பாலாஜி.”

“தனக்கெதிராக காய்நகர்த்திய பா.ஜ.க தலைவருக்குத்தான் முதல் ‘செக்’ வைக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். அந்த பா.ஜ.க தலைவர், தன் உறவினர் பெயரில் வாங்கிக் குவித்திருக்கும் சொத்து விவரங்கள் அனைத்தையும் தோண்டித் துருவத் தொடங்கியிருக்கிறார்கள் பாலாஜியின் ஆதரவாளர்கள். செங்கல்சூளையில் தொடங்கி, கொசுவலை கம்பெனி முதலீடுகள் வரை பல விவகாரங்களும் தோண்டப்படுகின்றன.

‘அமைச்சர் பதவியில் தொடர்வதால், ரிலீஸானவுடன் இலாகா ஒதுக்கப்பட்டு விடும். முதல் 100 நாள்களுக்குள் அதிரடியாக எதையாவது செய்து, தலைமையின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கவும் திட்டமிடுகிறார் பாலாஜி’ என்கிறார்கள் கரூர் தி.மு.க-வினர்.”

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு