/* */

பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
X

ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதித்த பக்தர்கள்.

ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் பெரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் தீ மிதி திருவிழா முதல் நாளான கடந்த 26 - தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இரண்டாவது நாளான 27 - தேதி பக்காசூரன் வதம், இதை தொடர்ந்து மூன்றாவது நாள் திருக்கல்யாணம், நான்காம் நாள் நச்சி குழியாகம், ஐந்தாம் நாள் அரக்கு மாங்கோட்டை , ஆறாவது நாள் அர்ஜுனன் தபசு, ஏழாவது நாள் தர்மராஜா வீதியுலா, எட்டாவது நாள் மாடுபிடி சண்டை , 9 - ம் நாள் துரியோதனன் படுகளம்,

10 - வது நாளான நேற்று மாலை லச்சிவாக்கம் செங்காளம்மன் கோயிலிலிருந்து உற்சவரான திரவுபதி அம்மன் டிராக்டரில் ஊர்வலமாக வயல் வெளிகளில் இறங்கி பெரம்பூர் கிராமத்தில் தீ மிதிக்கும் இடத்திற்கு வந்தது , உடன் காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் 110 பேர் அம்மனுடன் ஊர்வலமாக வந்து தீ மிதித்தனர். கடைசி நாளான இன்று அரவான் இறுதி சடங்கு நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு விழா முடிந்தது.

Updated On: 6 Jun 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை