/* */

ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்

Erode news- ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம் நடைபெற்றது .

HIGHLIGHTS

ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
X

Erode news- துவக்க விழாவையொட்டி ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்  நடைபெற்றது.

Erode news, Erode news today- ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம் நடைபெற்றது .

ஈரோடு மாநகரில் மேட்டூர் சாலையில் அபிராமி தியேட்டர் கடந்த 1985ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த தியேட்டர் ஈரோடு மக்களுக்காக திருப்பூர் சக்தி சினிமாஸ் உடன் இணைந்து ஸ்ரீ சக்தி அபிராமி சினிமாஸ் என்ற புதிய பெயரில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய பொலிவுடன் செயல்பட உள்ளது.

இந்நிலையில், அபிராமி தியேட்டரின் 39ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தியேட்டரில் கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் தலைமையில் கணபதி யாகம் நடைபெற்றது. அபிராமி தியேட்டர் சேர்மேன் என்.எஸ்.எஸ். செந்தில் நாதன், நிர்வாக இயக்குநர்கள் புனிதா, அண்ணாமலை, ஸ்ரீ சக்தி அபிராமி சினிமாஸ் நிர்வாக இயக்குநர்கள் கார்த்திக், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த யாகத்தில் தியேட்டர் நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அபிராமி தியேட்டர் சேர்மேன் செந்தில்நாதன் கூறியதாவது:-

அபிராமி தியேட்டர் மக்களின் பேராதரவுடன் கடந்த 39 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஈரோடு மக்களுக்காக ஸ்ரீ சக்தி அபிராமி சினிமாஸ் என பெயரில், 7 ஸ்கிரின் (தியேட்டர்) கொண்ட தியேட்டராக புதிய பொலிவுடன் விரைவில் செயல்பட உள்ளது. தியேட்டரில் பார்வையாளர்க‌ளான மக்களுக்கு பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.

குறிப்பாக சுமார் 300 நான்கு சக்கர வாகனங்கள் (கார்கள்) நிறுத்துவதற்கு என தியேட்டர் வளாகத்திலேயே புதிய பார்க்கிங் வசதி, 7 தியேட்டர்களிலும் நவீன ஏசி வசதி, இருக்கை வசதிகள், பால்கனிக்கு கூடுதல் வசதி போன்றவை ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் தியேட்டர் திறப்பு விழா செய்யப்பட்டு, திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதுகுறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 30 April 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்