தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
X

தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் சத்துள்ள பொருட்களை வழங்கிய துணை சபாநாயகர்

கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் தண்ணீர் பந்தலை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சோமாசிபாடியில் தண்ணீர் பந்தலை சட்டப்பேரவைத்துறை சபாநாயகர் பிச்சாண்டி சிறந்து வைத்தார்.

கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தினமும் நீர்மோர், தண்ணீர் ஆகியவற்றை வழங்கி தாகம் தணிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள சோமாசிபாடி ஒன்றியத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் ,வெள்ளரி பிஞ்சு, நுங்கு, குளிர்பானம் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏழுமலை, விஜயா சேக,ர் தொகுதி பொறுப்பாளர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள நாயுடு மங்கலம், மல்லவாடி, மங்கலம் ஆகிய இடங்களில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பாலு அனைவரின் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசும் போது

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் இப்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என்பதற்காக நாயுடு மங்கலம் , துரிஞ்சாபுரம் மங்கலம் ஆகிய இடங்களில் இப்போது தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தணிப்பதற்காக திமுக சார்பில் பல இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்துள்ளோம்.

இந்த தண்ணீர் பந்தல்களில் தண்ணீர், நீர் மோர் ,தர்பூசணி, முலாம்பழம் ,வெள்ளரிக்காய், பப்பாளி ,பழச்சாறகம், இளநீர் போன்ற நீர் சத்துள்ள பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.

இந்த தண்ணீர் பந்தலில் தினமும் காலை ஏழு மணி முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்களுக்கு தண்ணீர் நீர்மோர் வழங்கப்படும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஒன்றிய குழு தலைவர்கள் , ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்