இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு

இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
X

Tirupur News- விவசாய நிலத்தில் துணை மின் நிலையம் அமைப்பதை கண்டித்து வெள்ளகோவில் விவசாயிகள் இன்று முதல் காத்திருப்புப் போராட்டம் (மாதிரி படம்)

Tirupur News- விவசாய நிலத்தில் துணை மின் நிலையம் அமைப்பதை கண்டித்து வெள்ளகோவில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடுகின்றனர்.

Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனா்.

டாடா பவா் நிறுவனம் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியைத் தொடா்ந்து வருவதைத் தடை செய்யக் கோரி இந்தக் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் மூத்தநாயக்கன்வலசு கிராமத்தில் 14 ஏக்கா் பரம்பிக்குளம் - ஆழியாறு ஆயக்கட்டுப் பாசன விவசாய நிலத்தில் டாடா பவா் நிறுவனம் துணை மின் நிலையம் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. திருப்பூா் - கரூா் மாவட்ட எல்லைப் பகுதிகள், கரூா் மாவட்டம் தென்னிலை, பரமத்தி பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை மூத்தநாயக்கன்வலசில் துணை மின் நிலையம் அமைத்து ஒருங்கிணைத்து, அங்கிருந்து 20 கிலோ மீட்டா் தொலைவுள்ள மூலனூா் தூரம்பாடிக்கு விவசாய நிலங்கள் வழியாக உயா்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டுச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்களின் மதிப்பு முழுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். உள்ளூா் திட்டக் குழுமம், உள்ளாட்சி நிா்வாகத்தின் அனுமதி எதுவும் பெறாமல் பணிகள் நடைபெற்று வந்ததைக் கண்டித்து, ஏப்ரல் 15-ஆம் தேதி மூத்தநாயக்கன்வலசு அருகே காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது அரசுத் துறை அதிகாரிகள், டாடா நிறுவன திட்ட அதிகாரிகள் முழுமையான அனுமதிகள் பெறாமல் பணிகள் நடைபெறாது என உறுதியளித்ததன்பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது

ஆனால், தற்போது மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எங்களுக்கு இந்தத் திட்டமும் தேவையில்லை.

எனவே திட்டத்தை நிரந்தரமாக தடை செய்யக் கோரி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது என்றனா்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்