/* */

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆகியவற்றுக்கு மே 1 முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
X

சென்னை உயர்நீதிமன்றம் 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை காலத்தில் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்றத்தில் மே மாதம் 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, 16-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.சக்திவேல், என்.செந்தில்குமார் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.சரவணன், பி.பி.பாலாஜி ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் விசாரிப்பார்கள்.

இதேபோல உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மே 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.வேல்முருகன், அப்துல் குத்தூஸ், பி.தனபால் ஆகியோரும், 15,16-ம் தேதிகளில் பி.வேல்முருகன், பி.வடமலை, கே.ராஜசேகர் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன் ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 April 2024 3:10 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு
  10. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு