/* */

தடைக்கால நிவாரண நிதி உடனடியாக வழங்க தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தடைக்கால நிவாரண நிதி உடனடியாக வழங்க தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை
X

மீன்பிடி தடைக்காலத்தில் கடற்கரை ஓரம் ஓய்வெடுக்கும் படகுகள்.

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் இதனால் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருப்பதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தடைகாலம் நிறைவடைந்து விசைப்படகுகள் தொழிலுக்காக கடலுக்கு செல்வதும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரண தொகையும் இதுவரை மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே, கொரோனா பாதிப்பு மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் மீனவர்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு நிவாரண தொகையை விரைவில் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

Updated On: 23 May 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு