/* */

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
X

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படியாக, தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வன அலுவலர் அபிசேக் டோமர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன், வருவாய் அதிகாரி கண்ணபிரான், உதவி ஆட்சியர் ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். பேரணி, தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து தொடங்கி முத்துநகர் கடற்கரை வரை சுமார் 3 கி.மீ. நடந்தது. இதில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை உணர்த்தும் வகையில் மெய்சித்திர விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கொரோனா தொற்று 3-வது அலை தூத்துக்குடி மாவட்டத்தில் பரவாமல் தடுக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். இருப்பினும் 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், தடையில்லா ஆக்ஸிஜன் வழங்குவது, கூடுதல் படுக்கைகள் என அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

"மக்களை தேடி மருத்துவம்" திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் கீழமுடிமன் கிராமத்தில் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக நோய்வாய்ப்பட்டு நேரடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற முடியாதவர்களின் உடல் நலனை பாதுகாக்க அவர்களின் வீடுகளுக்கே சென்று உடல் பரிசோதனை செய்தல் மருந்துப் பொருட்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு.வித்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2021 5:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  3. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  4. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  5. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  6. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  7. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  8. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  9. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி