/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு
X

பைல் படம்.

ஆவினுக்கான பால் வரத்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து குறைந்து வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் ஆவின் பால் விநியோகம் செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு சுமார் 33ஆயிரம் லிட்டர் பால் விற்பனை ஆகும் சூழலில், 43 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது கொள்முதல் ஆவதோ வெறும் 20 ஆயிரம் லிட்டர் மட்டுமே. திண்டுக்கல் ஒன்றியத்தில் இருந்து சுமார் 9ஆயிரம் லிட்டர் பால் கொண்டு வரப்படுகிறது. ஆக மொத்தம் நாளொன்றுக்கு 29 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே தூத்துக்குடி ஒன்றியத்திற்கு வருவதால் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக பால் விநியோகம் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் நிறைகொழுப்பு பால் உற்பத்திக்கான வெண்ணெய் மற்றும் SMP கையிருப்பு இல்லாத காரணத்தால் நிறைகொழுப்பு பாலான ஆரஞ்சு நிற பால் பாக்கெட் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு சொற்ப அளவிலேயே பால் பாக்கெட்டுகள் ஆவின் நிர்வாகத்தால் பால் முகவர்களுக்கு வழங்கப்பட்டுவதால் பொதுமக்களுக்கு நிறைகொழுப்பு பால் வழங்க முடியாமல் பால் முகவர்கள் கடும் அல்லல்பட்டு வருகின்றனர்.

இதனால் தூத்துக்குடி ஒன்றியத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தற்போது தான் ஆவின் நிர்வாகம் முகவர்களுக்கு பால் சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளது. இதே நிலை நீடித்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை பாதிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுவர்.

எனவே அரசு பால் கொள்முதலில் கூடுதல் கவனம் செலுத்தி அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது

Updated On: 23 Feb 2023 7:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...