/* */

தூத்துக்குடி அரசு ஐடிஐ-யில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் துவக்கம்

THOOTHUKUDI-Apprenticeship Camp Government ITI

HIGHLIGHTS

தூத்துக்குடி அரசு ஐடிஐ-யில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் துவக்கம்
X

தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி துறை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் இணைந்து நடத்திய மாவட்ட மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், இன்று (04.10.2021) குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இன்றைய தினம் இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் 32 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளது.

இதில் அரசு மற்றும் தனியார் ஐடிஐ பயிற்சியை முடித்தவர்கள் மற்றும் இறுதியாண்டு ஐடிஐ பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றோர் /தோல்வியடைந்தோர் மூன்றுமாதகால அடிப்படை பயற்சியுடன் ஒருவருட காலதொழிற் பழகுநர் பயிற்சிபெறலாம். எனவே இம் மாணவர்களும் இத் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.7700/-முதல் ரூ.10,000/-வரை நிறுவனங்களால் வழங்கப்படும்.

சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில்தான் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. நமது பகுதியில் துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் சாலை வசதி ஆகிய வசதிகள் உள்ளன. நீர் நிலைகளின் மூலம் மின்சாரம் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. தொழில் பழகுநர் பயிற்சி அளிப்பதன் மூலம் தொழில் முனைவோர்களுக்கு தொழில் சாலையில் பணியில் உள்ள ஊழியர்கள் தங்களை திறன்படுத்திக்கொள்ள உதவுகிறது.

தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதன் மூலம் அவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் தனியர் தொழில் நிறுவனங்களில் அல்லது தனியாக தொழில் தொடங்குவதற்கு, அயல் நாடுகளில் அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் பொருளாதாரம் மற்றும் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் ஜெ.ஏஞ்சல் விஜய நிர்மலா, மத்திய அரசு பயிற்சிநர் (பயிற்சி) சின்னத்துரை, அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் பழனி, தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி பயிற்சி அலுவலர் சுந்தரராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Oct 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!