/* */

பொங்கலை முன்னிட்டு கோவில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு புத்தாடைகள்

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலில் பொங்கலை முன்னிட்டு அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பொங்கலை முன்னிட்டு கோவில் அர்ச்சகர், பணியாளர்களுக்கு புத்தாடைகள்
X

அர்ச்சகர் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. புத்தாடை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் தமிழகத்தில் உள்ள அர்ச்சகர்களுக்கு மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 841 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தலா 2 புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வீதம் ரூ.7,62,474 மதிப்பீட்டில் சீருடைகள் கொள்முதல் செய்யப்பட்டு புத்தாடைகள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், தீட்சதர்கள் ஆகியோர்களுக்கு வேஷ்டி புத்தாடைகள், திருக்கோயில்களில் உள்துறையில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு 8 முழம் வேஷ்டி மற்றும் சந்தன நிற சட்டை, வெளித்துறையில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு ப்ரௌன் கால் சட்டை மற்றும் சந்தன நிற மேல் சட்டை மற்றும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் 2 புடவைகள் ஒரு பணியாளிக்கு தலா 2 வீதம் வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.1000 ,460 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கனவே ஒரு இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இத்தொகை 2 இலட்சம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இம்மாவட்டத்திலிருந்து 47 திருக்கோயில்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கிராமப்புற திருக்கோயில் திட்டத்தின்படி கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஏற்கனவே ஒரு இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தொகை 2 இலட்சம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 42 இம்மாவட்டத்திலிருந்து திருக்கோயில்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், திருவாரூர் மாவட்ட பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட செயல்அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Updated On: 12 Jan 2022 5:29 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  9. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  10. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி