/* */

திருாவாரூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்- கலெக்டர் வழங்கினார்

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை கலெக்டர் வழங்கினார்

HIGHLIGHTS

திருாவாரூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்- கலெக்டர் வழங்கினார்
X

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையினை உருவாக்கி அதற்கென சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பத்தே தினங்களுக்குள் குறைதீர்ப்பு பணிகள் துவங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கி தொடங்கி வைத்தார்

அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் உடனடி தீர்வு காணப்பட வேண்டிய மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு செய்திருந்த மாற்றுத்திறனாளி களில் 5 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 600 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர்.புவனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Sep 2021 11:35 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...