/* */

கோயிலில் முதியவர் உள்ளிருப்பு போராட்டம்

தஞ்சையில் கோவில் சுற்றுச்சுவரை இடித்து கேட் அமைத்ததை கண்டித்து முதியவர் ஒருவர் கோவிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்

HIGHLIGHTS

கோயிலில் முதியவர் உள்ளிருப்பு போராட்டம்
X

 தஞ்சையில் கோவில் சுற்றுச்சுவரை இடித்து தனிநபர் கேட் அமைத்ததை கண்டித்து முதியவர் ஒருவர் கோவிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் 

தஞ்சையில் கோவில் சுற்றுச்சுவரை இடித்து தனிநபர் கேட் அமைத்ததை கண்டித்து முதியவர் ஒருவர் கோவிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை வெண்ணாற்றங்கரையில் மணிகுன்ற பெருமாள் கோவில் உள்ளது. இது அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில். இந்நிலையில் இக்கோவிலின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை இடித்து தனிநபர் ஒருவர் கேட் அமைத்து இருந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கிரிஜா சங்கர் (62) என்பவர் சுற்றுச்சுவரைக் மீண்டும் கட்டி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோவிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வருகிறது.‌ போராட்டத்தை கைவிடுங்கள் என்று தெரிவித்தனர். இருப்பினும் கிரிஜா சங்கர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 18 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!