/* */

அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

தஞ்சாவூரில் அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
X

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பாக அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்தீபக் ஜேக்கப் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பாக அங்கன்வாடி பணியாளர்களின் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் .தீபக் ஜேக்கப் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று (14.12.2023) நடைபெற்றது.

முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் கை.ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். ஆய்வு கூட்டத்தில் அம்மாபேட்டை மகிமாலை மையப் பணியாளர் எஸ்.கவிதா, ஒரத்தநாடு திரௌபதி அம்மன் கோவில் மையப் பணியாளர் நவநீதம், பூதலூர் ஆவாரம்பட்டி மையப் பணியாளர் ஷியாமளா, தமிழ்நாடு ஊரகம் விளார் மையப் பணியாளர் .எம்.மகாலெட்சுமி, தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்த பணியாளர் நிரோஜினி, திருவையாறு மாச்சனூர் மையத்தைச் சேர்ந்த ஜெயசீலி ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதற்கான பரிசுகளையும், கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் அரசின் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அவர்களின் கல்விக்கும் உறுதுணையாக இருந்து நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு வருகின்ற குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. இதனை உணர்ந்து குழந்தைகளின் வருகைப் பதிவினை கண்காணித்து அவர்களின் கல்வியிலும், ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்க நீங்கள் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாதிரி அங்கன்வாடி மையமாக நீங்கள் பணியாற்றும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

Updated On: 14 Dec 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது