/* */

மாநில கைத்தறி வடிவமைப்பாளருக்கான போட்டி: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.12.2023 என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தகவல்

HIGHLIGHTS

மாநில கைத்தறி வடிவமைப்பாளருக்கான போட்டி: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்

மாநில அளவில் இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.12.2023 என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தகவல்.

இளம் தலைமுறையினரிடையே கைத்தறி இரகத்தின் மீது பிணைப்பை ஏற்படுத்தவும், அவ்வப்போது மாறிவரும் நவீன சந்தையின் தேவையினை அறிந்து புதிய வாடிக்கையாளர்களை கரை ஏதுவாகவும், கைத்தறி இரகங்களில் புதுமையினை புகுத்தி விற்பனையினை அதிகரித்திடும் நோக்கிலும், மாநில அளவில் இளம் கைத்தறி வடிமைப்பாளர்களிடமிருந்து சிறந்த வடிவமைப்புகளை போட்டித்தேர்வின் மூலம் தேர்வு செய்ய ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்/ வடிவமைப்பு நிறுவனங்கள் ஜவுளி தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் வடிவமைப் பாளர்களுக்கு இடையே இப்போட்டி நடத்தப்படுகிறது.

போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் முதல் 3 சிறந்த வடிவமைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/ இரண்டாம் பரிசாக ரூ.75,000/- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.50,000/- வழங்கப்படும்.

பங்கேற்பாளர்களின் தகுதி, வடிவமைப்புகளில் உள்ள துணை வகைகள், விதிமுறைகள் மற்றும் வடிவமைப்பு நுழைவு நிபந்தனைகள் போன்றவைகள் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வழிகாட்டுதல்கள், வடிவமைப்பு நுழைவுப் படிவம் மற்றும் வடிவமைப்பை அனுப்ப வேண்டிய முகவரியின் விவரங்கள் www.loomworld.in என்ற இணைய தளத்தில் உள்ளன.

இளம் கைத்தறி வடிவமைப்பாளர்களிடமிருந்து மாநில அளவிலான சிறந்த வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள தகுதியான பங்கேற்பாளர்கள் 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம், HB/7, சிட்கோ தொழிற்பேட்டை திருபுவனம்-612103 என்ற முகவரிக்கு வடிவமைப்பு உள்ளீடுகளை நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


Updated On: 17 Dec 2023 5:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  7. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  8. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  9. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  10. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...