/* */

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பெண்கள் தின விழா கொண்டாட்டம்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பெண்கள் தின விழா கொண்டாட்டம்
X

 அரசு மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. 

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி சர்வதேச மகளிர் தின விழா நேற்று மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா அவர்கள் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினர்களாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு இரா ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ், உதவி உறைவிட மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மூத்த மருத்துவர் லதா, மருத்துவர் கீதா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பிச்சைவடிவு, பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் சுவர்ணலதா வரவேற்புரை ஆற்றினார்.

இணை இயக்குனர் அவர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினார் .

மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேருரை ஆற்றினார் இதில் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மகளிர் சேர்ந்து கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தை சந்தோசமாக கொண்டாடினர்.

மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் பெண்கள் பற்றிய விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள் வாசித்தனார். ஆலடி அருணா செவிலியர் பயிற்சி மற்றும் மருந்தாளுனர் பயிற்சி பெண்கள் நடனம் ஆடி விழாவை கலகலப்பாக்கினர். நிகழ்ச்சியின் முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் இராஜாத்தி ஜெகதா நன்றியுரை வழங்கினார், இந்நிகழ்ச்சியினை செவிலியர் உமா மஹேஸ்வரி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Updated On: 9 March 2023 1:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்