/* */

தென்காசியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தென்காசியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோடிக்கணக்கான இந்தியர்கள் கடின உழைப்பால் சேமித்த பணத்தை, எல்.ஐ.சி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ததின் மூலம், அந்த நிறுவனங்கள் சந்தை மதிப்பை இழந்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் போராடி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 6ம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பின் அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பழனி நாடார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஹின்டென்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்றக் குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும். எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மற்றும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முதலீடு செய்ய நிர்ப்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க சரியான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், சுரண்டை நகர மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணியன்,மாவட்ட பொருளாளர், முரளி ராஜா ,சுரண்டை நகர மன்ற தலைவர் வள்ளி முருகன், மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், நகர தலைவர்கள் தென்காசி மாடசாமி ஜோதிடர், சுரண்டை எஸ் .கே .டி. ஜெயபால், கீழப்பாவூர் சிங்கக்குட்டி, வட்டார தலைவர்கள் குற்றாலம் பெருமாள், கார்வின், முன்னாள் செங்கோட்டை யூனியன் தலைவர் சட்டநாதன்,மாவட்ட பொதுச்செயலாளர் காஜா மைதீன்,சந்தோஷ், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Feb 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  3. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  4. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  5. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  6. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  7. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..