/* */

பூட்டுதாக்கு ஊராட்சி தெருக்களில் தேங்கியிருக்கும் மழைநீர்

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கி்ல் உள்ள தெருக்களில் மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாத்திற்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

HIGHLIGHTS

பூட்டுதாக்கு ஊராட்சி தெருக்களில் தேங்கியிருக்கும் மழைநீர்
X

பூட்டுதாக்கு கீழன்டைத் தெருவில் தேங்கிக் கிடந்து நாற்றமடித்து வரும் மழைநீர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்தைச்சேர்ந்த பூட்டுதாக்குப் பகுதிகளில் கடந்த 2நாட்களாக மழைப் பெய்து வருகிறது . இதனால் அங்குள்ள கீழண்டைத்தெரு முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்த தெருவில் கழிவு நீர் வெளியேற்றும் கால்வாய் போன்றவை அமைக்கப்படாததால் தெருவில் மழைநீர் தேங்கி ஓடையை போல் காட்சியளிக்கிறது.

இதனால் தெருவில் வசிக்கும் பொது மக்கள் வெளியில் சென்றால் முழங்காலளவு தண்ணீரில் நடந்து செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் மேடு அறியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர் . மழைநீர் தேங்குவதால் விஷபூச்சி வீட்டிற்குள் வருகின்றன இதனால் பொதுமக்கள் பெரிதும். அச்சமடைந்துள்ளனர்.

எனவே அப்பகுதியிலிருந்து மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் உடனேநடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் கொசு தொல்லை காரணமாக இரவில் மக்கள் தூக்கமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவும் அபாயத்தில் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 2 July 2021 12:57 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...