/* */

பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை, பொது நூலகத்துறை சார்பில் இப்பேரணி நடைபெறுகிறது

HIGHLIGHTS

பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இராஜா ராம்மோகன் ராயின் பிறந்த நாளினை முன்னிட்டு, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: நவீன இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் இராஜா ராம்மோகன் ராயின் 250வது பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடும் விதமாக, 'பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நாட்டின் 250 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

இராஜாராம் மோகன்ராய் அவர்கள் மே 22 1772-ஆம் ஆண்டு பிறந்தார். பெண்களுக்கு நீதி வேண்டும் என்று அரும்பாடு பட்ட முதல் இந்திய மேதை இராஜா ராம் மோகன் ராய்.கணவன் இறந்தால், துணைவன் உடல் எரியும் சிதை நெருப்பிலேயே பெண்கள் துடிதுடிக்க எரிந்துச் சாம்பலாக வேண்டும் என்ற சதி எனும் கொடுமையான மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்து இராஜா ராம் மோகன் ராய் போராடினார். 1829-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இராஜப் பிரதிநிதியாகப் பணியாற்றிய லார்டு வில்லியம் பெண்டிங் உதவியால் சதி திட்டத்தைச் சட்ட விரோதமாக்கி வெற்றி பெற்றார். சதி திட்டத்தை வீழ்த்திப் பெண்களுக்குரிய நீதியை நிலை நாட்டிய சீர்திருத்த மாவீரராக இராஜராம் மோகன்ராய் திகழ்ந்தார்.

கணவன் இறந்த பிறகு பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் திட்டத்திற்காக அவர் போராடினார்.பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று இராஜாராம் போராட்டம் செய்தார்.பலமனைவிகள் திருமணத்தைச் சட்ட விரோதமாக்கிட ராம்மோகன் ராய் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அறிவுறுத்தினார்.பெண்களை விலைக்கு விற்கும் மூடப் பழக்க வழக்கத்தை எதிர்த்தும், 'பெண் விடுதலை' என்ற இயக்கப் போராட்டத்தை நடத்தியும், இராஜராம் மோகன்ராய் வெற்றி கண்டார்.

அந்த வகையில், இராஜாராம் மோகன்ராய் அவர்களின் 250-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு , இந்திய அளவில் அனைத்துப் பகுதிகளிலும் பெண்கள் மேம்பாடு" தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை, கொல்கத்தா மற்றும் பொது நூலகத்துறை சார்பில் இப்பேரணி நடைபெறுகிறது.

இந்த விழிப்புணர்வு பேரணியானது புதுக்கோட்டை நகரின் டவுன் ஹாலில் தொடங்கி, மேல இராஜவீதி வழியாக மாவட்ட மைய நூலகத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் 250 பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட நூலக அலுவலர் (பொ) சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 Oct 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  2. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  3. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  5. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  6. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  7. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  8. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...