/* */

நேரு யுவகேந்திரா சார்பில் இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்

சத்தியமங்கலம் மேலூரில் அமைந்துள்ள ஐ ஐ பி எச் எஸ் தீ மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

HIGHLIGHTS

நேரு யுவகேந்திரா சார்பில்  இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம்
X

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோருக்கான தலைமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான மூன்று நாள் பயிற்சி முகாமின் துவக்க விழா

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா இளையோருக்கான தலைமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது.

இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோருக்கான தலைமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான மூன்று நாள் பயிற்சி முகாமின் துவக்க விழா சத்தியமங்கலம் மேலூரில் அமைந்துள்ள ஐ ஐ பி எச் எஸ் தீ மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் பயிற்சி உபகரணங்களை வழங்கி தலைமை உரையாற்றினார். நேரு யுவகேந்திராவின் திட்ட உதவி அலுவலர் ரா.நமச்சிவாயம் திட்ட நோக்கம் குறித்து பேசியதாவது: நேரு யுவ கேந்திரா என்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கிராமப்புற இளைஞர்களுக்கு வழிவகைகளை வழங்குதல், அவர்களின் ஆளுமை மற்றும் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.

சென்ற 1972ஆம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்ட இளைஞர் நல மேம்பாட்டு அமைப்பாகும். ராஜீவ்காந்தி இதனை 1987-ல் நேரு யுவ கேந்திரா சங்கதன் என இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக மாற்றினார். இது உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான இளைஞர் மேம்பாட்டு அமைப்பாகும். இது தன்னார்வ, சுய உதவி மற்றும் சமூக பங்கேற்பு கொள்கையின் அடிப்படையில் இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைக்கிறது.

நேரு யுவ கேந்திரா சங்கதன் இளைஞர் விவகார அமைச்சகத்தின் பல்வேறு இளைஞர் நலத் திட்டங்கள் மற்றும் பிற அமைச் சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்புத் திட்டங்களையும் இளைஞர் மேம்பாட்டின் பல்வேறு வகைகளில் பணியாற்றி வருகிறது.

நல்ல குடியுரிமை, சிந்தனை மற்றும் மதச்சார்பற்ற வழிகளில் நடந்துகொள்வது, திறன் மேம்பாடு மற்றும் இளைஞர்கள் உற்பத்தி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நடத்தை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க உதவுவதில் முக்கிய கவனம் செலுத்தப் படுகிறது. மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக கிராமப்புற இளைஞர்களுக்கு வழிவகைகளை வழங்குதல், அவர்களின் ஆளுமை மற்றும் திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது என்றார் நமச்சிவாயம்.

பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சூரியபிரபு விழா துவக்க உரையாற்றினார். எஸ் .மேலூர் தீ மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி தாளாளர் இ.சாந்தி, சாலை பாதுகாப்பு சங்க தலைவர் க,மோகன்ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து 40 இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி யில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புத்தாஸ் வீரக் கலைகள் கழக நிறுவனர் கார்த்திகேயன் வரவேற்றார். நிறைவாக மேலூர் தீ மற்றும் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி விரிவுரையாளர் முத்துக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Updated On: 29 Dec 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!