/* */

புதுக்கோட்டை.யில் அரசு போக்குவரத்து கழக ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் ரத்து செய்திட வேண்டும்

HIGHLIGHTS

புதுக்கோட்டை.யில் அரசு போக்குவரத்து கழக ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள்

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள புறநகர் கிளை முன்பு, புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஏஐடியூசி சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் தர்மராஜ் ,சிங்கமுத்து, சக்திவேல், வின்சன்ட், கணேசன், பாலகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், 14 -ஆவது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்து கழகங்கள் சேவை தொய்வின்றி தொடர்ந்திட வரவுக்கும் செலவுக்கும் ஆனவித்தியாசத் தொகையை அரசே ஏற்க வேண்டும். மத்திய அரசும் பல மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு 28% வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசும் இந்த உயர்வினை வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற வேலை நிறுத்த காலத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை, தொழிலாளர் துறை ஆணையர் முன்பு ஒப்புக்கொண்டபடி, போக்குவரக்குக்கழக நிர்வாகங்கள் ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Updated On: 7 Sep 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது