/* */

பெரம்பலூர்: ஆலயங்களில் சுவாமி சிலைகள் மீண்டும் உடைப்பால் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் இந்து கோயில்களில் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: ஆலயங்களில் சுவாமி சிலைகள் மீண்டும் உடைப்பால் பரபரப்பு
X
பெரம்பலூர் மாவட்டத்தில் சுவாமி சிலைகள் மீண்டும் உடைக்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் திருக்கோவில். இத்திருக்கோவில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக உள்ளது

இத்திருக்கோவில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்து இருக்கும்.இத்திருக்கோவிலுக்கு அருகில் உள்ள பெரியசாமி மலையில் பெரியசாமி, செங்கமலயார், உள்ளிட்ட திருக்கோவில் உள்ளது.இந்நிலையில் கடந்த 6ம் தேதி பெரியசாமி மலையில் 5 க்கும் மேற்பட்ட சுடுமண் சிற்பங்கள் உடைக்கப்பட்டது.

அதனையடுத்து 8 ம் தேதி சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பசாமி கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டது.

இதனிடையே பெரியசாமி மலையில் 20 அடி உயரமுள்ள பிரமாண்ட பெரியசாமி சுடுமண் சிலை, செங்கமல சுவாமி சிலை, குரப்புள்ளையான் சிலை, வாகனங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுடுமண் சிலைகள் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. சஞ்சீவிகுமார் தலைமையிலான காவல்துறையினர் தடவியல் நிபுணர்,மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் அடுத்தடுத்து சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 27 Oct 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!