/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடந்த சிறப்பு முகாமில் பாெதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

கொரோனாவைத் தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி என்பதை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஶ்ரீவெங்கடபிரியா கொரோனா தடுப்பூசி முகாம்களைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழக முதல்வரின் போர்க்கால நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில், 23.08.2021 முதல் 25.08.2021 வரை கொரானா தடுப்பூசி முகாம் செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள துணை சுகாதார நிலையங்கள், அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என ஒரு நாளைக்கு 90 இடங்களிலும் என மொத்தம் ஒவ்வொரு நாளும் தலா 119 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு இன்று துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பேராயுதம் தடுப்பூசி என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இந்நிகழ்வின்போது, சுகாதாரத்துறை துணை இயக்குநர் ச.செந்தில்குமார், பெரம்பலூர் வட்டாட்சியர் சின்னத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ஊராட்சிமன்றத் தலைவர்கள் சித்ராதேவிகுமார்(எளம்பலூர்), சந்திரா(செங்குணம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Aug 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது