/* */

மக்களவை தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் : நாம் தமிழர் சீமான்

மக்களவை தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்

HIGHLIGHTS

மக்களவை தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் : நாம் தமிழர் சீமான்
X

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் வந்திருந்தார். அப்போது . அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாம் தமிழர்கட்சி ஆரம்பித்து, 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு கோடி முறை கூறிவிட்டேன். வரும் மக்களவை தேர்தலில், யாருடனும் கூட்டணி கிடையாது. மக்களை நம்பி தான் இருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். வெற்றி பெறுவோம்.

கல்வி, மருத்துவம், தண்ணீர் என எல்லாத்தையும் விற்றுவிட்ட நிலையில், தற்போது குழந்தைகளை விற்று வருகின்றனர். மூளை சாவு என்ற நோயை உருவாக்கி, மனிதனின் உடல் உறுப்புகளை விற்கின்றனர். அரசே மண்ணையும், மலையையும் விற்பனை செய்துவிட்டது.

தமிழகம் என்பது, கருணாநிதி மற்றும் அவர்களை சார்ந்தவர்களின், 90 சதவீத சொத்தாக உள்ளது. ஒழுகும் பள்ளிகளை சீரமைக்க முடியாத அரசு, பல கோடி ரூபாய் செலவு செய்து, சமாதி கட்டுகிறது.

தமிழக முதல்வர், செப் 15ல், தேர்தல் வாக்குறுதிகளை, 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என கூறி வருகிறார். ஆனால், ஆசிரியர்கள், செவிலியர்கள் எதற்காக போராட்டம் நடத்துகின்றனர்?

மகளிர் உரிமை தொகைக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு செலவு செய்கிறது.. யாருடைய பணத்தை செலவு செய்கிறார்கள். 60 ஆண்டுகளாக, திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஜெயிலர் திரைப்படத்திற்கு எவ்வித இடையூறும் வரவில்லை..நடிகர் விஜய் நடித்த லியோ படத்திற்கு, இசை வெளியீட்டு விழாவில் இருந்தே பிரச்னை தான். திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் வரை பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர்.

காரணம், நடிகர் விஜய் கட்சி துவங்கி அரசியலில் வருவதாக தெரிந்ததால் தான் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். தியேட்டர்கள் உங்களிடம் இருப்பதால் தான் மிரட்டி வருகின்றனர். அவர் நடிப்பதை நிறுத்தி விட்டால் என்ன செய்யமுடியும். தேவையில்லாமல் நடிகர் விஜயை சீண்டி விட்டீர்கள்.

தமிழகத்தை, 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் ஆண்டு விட்டனர். வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும். முகலாய, சேர, சோழ, பாண்டிய பேரரசுகளும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே அழிந்து போனது. அதேபோல், திராவிட கட்சிகளும் அழியும். திராவிட கட்சிகளை அழிப்போம்,.அழிந்து போகும்,. நாங்கள் வளர்ந்தாலே திராவிடம் வீழ்ந்து விடும்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்த அரசு, மதுவை மட்டும் விற்பது ஏன்? விளைநிலங்களை கையகப்படுத்தி ‘சிப்காட்’ அமைப்பதால், பெரு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் மட்டுமே லாபம் பெறுபவர். விளையாத நிலங்கள் என்று எதுவுமே இல்லை. கார்ப்ரேட் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு, நாடெல்லாம் வேட்டை காடாக மாறி விட்டது.

அண்ணாமலை நடக்க வேண்டும் என எண்ணுவதால், அவர் நடக்கிறார். நான் கட்சியினரை சந்தித்து பேச வேண்டும் என்பதால், அவர்களை சந்தித்து வருகிறேன். மக்களை இந்த அரசுகள் ஏமாற்றி, காதில் தேன் ஊற்ற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 17 Oct 2023 4:07 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்