ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ பதிவு
சென்னிமலை அருகே தியாகி குமரன் நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததையும், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய காரையும் படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.21) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 624.50 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் வாட்டி வதைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை முதல் இரவு வரை தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தாளவாடி, பெருந்துறை மற்றும் நம்பியூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் தியாகி குமரன் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. திடீரென மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்குதியைச் சேர்ந்த மக்கள் அவதி அடைந்தனர்.
இதேபோல், அந்தியூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அந்தியூர்-சத்தியமங்கலம் சாலையில் தவிட்டுப்பாளையம் பாலம் அருகே போதிய வடிகால் வசதி இல்லாததால் 10க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.
அதேபோல், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையின் ஒருபுறம் மழைநீர் ஆறாக ஓடியது. இதில், கார் மற்றும் இருசக்கர வாகனம் சிக்கியது. பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று (மே.20) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.21) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 24.00 மி.மீ,
மொடக்குறிச்சி - 25.00 மி.மீ,
கொடுமுடி - 32.00 மி.மீ,
பெருந்துறை - 69.10 மி.மீ,
சென்னிமலை - 87.00 மி.மீ,
பவானி - 55.20 மி.மீ,
கவுந்தப்பாடி - 29.40 மி.மீ,
அம்மாபேட்டை - 23.40 மி.மீ,
வரட்டுப்பள்ளம் அணை - 24.00 மி.மீ,
கோபிசெட்டிபாளையம் - 19.20 மி.மீ,
எலந்தகுட்டைமேடு - 37.40 மி.மீ,
கொடிவேரி அணை - 27.00 மி.மீ,
குண்டேரிப்பள்ளம் அணை - 37.20 மி.மீ,
நம்பியூர் - 73.20 மி.மீ,
சத்தியமங்கலம் - 19.00 மி.மீ,
பவானிசாகர் அணை - 19.40 மி.மீ,
தாளவாடி - 23.00 மி.மீ,
மாவட்டத்தில் மொத்தமாக 624.50 மி.மீ ஆகவும், சராசரியாக 36.74 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu