/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100ஐ விட குறைந்தது. இன்றைய பாதிப்பு 98 பேர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா  பாதிப்பு நிலவரம்
X

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100ஐ விட குறைந்தது. இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 98 பேர். மொத்தம் பாதிப்பு 67,394 பேர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பரமத்திவேலூர், கொமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் நாமக்கல், சேலம், பள்ளிபாளையம், ஈரோடு, கொமாரபளையம், ராசிபுரம், பெருந்துறை, கோவை, கரூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஒரு நாள் தொற்றுக்கு 500க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தொற்று படிப்படியாக குறைந்து இன்று 100ஐ விட குறைந்துள்ளது.

இதுவரை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,394 ஆக உயர்ந்துள்ளது. இன்று 348 பேர் சிகிச்சை குனமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 65,046 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 1,816- பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 532 ஆக உள்ளது.

Updated On: 10 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...