/* */

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை: ஆட்சியர்

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கலெக்டர்

HIGHLIGHTS

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை: ஆட்சியர்
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார்.

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, வெளிநாட்டில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், புதிதாக பரவி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது மிக விரைவாக பரவும் தன்மை கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பல்வேறு மாநிலங்களுடன் தொடர்புடைய தொழில்கள் நடைபெறும் மாவட்டமாகும். எனவே வெளி மாநிலங்களுக்கு சென்று வருவோர் மிகவும் பாதுகாப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா முதல் அலையின் போது உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை. பின்னர் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் விட்டதால் 2-ம் அலையின் போது அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரசின் வீரிய தன்மை அதிகமாக இருப்பதால், நம் நாட்டில் பரவும் பட்சத்தில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களிடையே தீவிர நோய் தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கடந்த இரு வாரங்களில் வெளிநாட்டில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அருகில் உள்ள அரசு சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் புகார்கள் அளிக்க மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு எண்ணை அழைக்கலாம்.

வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி நிர்வாகங்களின் அலுவலர்கள் தங்கள் பகுதியில் தனிமனித இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை முறையாக கண்காணித்து, பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், சப் கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 30 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?