/* */

மனுக்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாமக்கல் கலெக்டர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

மனுக்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்:  நாமக்கல் கலெக்டர்
X

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான, அனைத்துதுறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மெகராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு, 100 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு அலுவலர் மூலம் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாகபிரிக்கப்பட்டு தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் மூலம் பராமரிக்கப்படும் இண்டர்நெட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதை குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு இண்டர்நெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது நேரடி களஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணையுடன் பரிசீலித்து, நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு பதிலளிக்க வேண்டும். தகுந்த காரணங்கள் இன்றி எந்தொரு மனுவினையும் நிராகரிக்கக் கூடாது. மனுக்களுக்கு விரைவாகவும், முறையாகவும் தீர்வு கண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் ஈட்டித் தர வேண்டுமென்று கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு