/* */

நாமக்கல் ஆயுதப்படை போலீசில் துப்பாக்கிகள் பராமரிப்பு குறித்து ஆய்வு

நாமக்கல் ஆயுதப்படை போலீசில் துப்பாக்கிகள் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் ஆயுதப்படை போலீசில் துப்பாக்கிகள் பராமரிப்பு குறித்து ஆய்வு
X

நாமக்கல் மாவட்டத்தில் துப்பாக்கிகள் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் பணியாற்றும் போலீசாருக்கு, துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. அவை, அந்தந்த ஸ்டேசன்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிகளை ஆண்டுக்கு ஒரு முறை, மூன்றில் ஒரு பங்கு துப்பாக்கிகளை, ஆய்வு செய்வது வழக்கம். அதற்காக, சிறுபடை கலன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி தலவாய் ரவீந்திரன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி பயன்பாடு குறித்து ஆய்வு செய்தனர். தெடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசன்கள், வனத்துறை, கிளை சிறை ஆகியவற்றில் வைத்துள்ள துப்பாக்கிகள், ஆயுதப்படைக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இங்கு, ஏ.கே.,47 , எஸ்.எல்.ஆர்., இன்சார்ஸ், பம்ப் ஆக்ஷன், கேஸ் கன், ரைபிள், பிஸ்டல், ரிவால்வார் உள்ளிட்ட பல்வேறு வகையான துப்பாக்கிகள் உபயோகப்படுத்தும் அளவுக்கு இருக்கிறதா, முறையாக பரமாரிப்பு செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆயுதப்படை டி.எஸ்.பி. இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.

Updated On: 14 Sep 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!