/* */

தமிழ் வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

தமிழ் வளர்ச்சித்துறை  பேச்சுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற, மாணவ மாணவிகளுக்கு, கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021 - 22 ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவர்கலால் நேரு ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாள் அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளன்று அன்று நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், சிறப்பு பரிசு ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இப்பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 16 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை மொத்தம் ரூ.48 ஆயிரத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!