/* */

நாமக்கல்லில் சிவாஜிகணேசன் நினைவு நாளில் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி

நடிகர் சிவாஜிகணேசனின் நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் இசைக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

நாமக்கல்லில் சிவாஜிகணேசன் நினைவு நாளில் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி
X

நாமக்கல்லில் நடைபெற்ற நடிகர் சிவாஜிகணேசன் நினைவு நாளில் இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் சிவாஜிகணேசன் 20 வது நினைவு நாள் நிகழ்ச்சி நாமக்கல் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், தொகுதி அமைப்பாளர் செல்வம் உள்ளிட்டவர்கள் சிவாஜிகணேசன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அய்யம்பாளையம் முருகன் கோவிலில் நடைபெற்றது.

மாநில காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பினர் சத்திய மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மாநில காங்கிரஸ் மகளிர் அணி அமைப்பாளர் ராணி, மாவட்ட மகளிரணி தலைவர் மகேஸ்வரி, நகர காங்கிரஸ் தலைவர் மோகன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், திமுக பிரமுகர்கள் இளஞ்செழியன், பிரபு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 21 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  7. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  8. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  9. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  10. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!