/* */

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி கோவை மருத்துவமனையில் அனுமதி

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

HIGHLIGHTS

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி கோவை மருத்துவமனையில் அனுமதி
X

சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி.

சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி திடீர் நெஞ்சுவலி காரணமாக, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் (எஸ்டி), கடந்த 2021ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனவர் கே.பொன்னுசாமி. இவருக்கு சொந்தமான வீடு கொல்லிமலையில் உள்ளது.

அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் அவரது மகன் வசித்து வருகிறார். தற்போது பொன்னுசாமி லோக்சபா தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, தனது மகன் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனடியாக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 1 April 2024 5:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான கேரள பாசிப்பருப்பு பிரதமன் சமைச்சு பாருங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    தாவர உண்ணி பிராணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன்?
  3. ஆன்மீகம்
    ஓம் என்ற மந்திர உச்சரிப்பு... பிரபஞ்ச சக்தியை நம்முள் ஈர்க்கும் ஒரு...
  4. லைஃப்ஸ்டைல்
    உடல் எடையை குறைக்கும் சுவையான கொள்ளு குழம்பு செய்வது எப்படி?
  5. வீடியோ
    🔴 LIVE : அதிமுகவால் Savukku Shankar உயிருக்கு அச்சுறுத்தல் | திருச்சி...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் வைகாசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு
  8. விளையாட்டு
    கரூரில் ஆண், பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்
  9. கரூர்
    ஜூன் 8-ம் தேதி கரூரில் கூடுகிறது தேசிய மக்கள் நீதிமன்றம்
  10. வீடியோ
    இப்படியெல்லாம் பாடம் எடுக்க முடியுமா? | உ.பி பள்ளிகல்வித்துறை அசத்தல்!...