/* */

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
X

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 24.திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த 19.04.2024 அன்று வாக்குப்பதிவானது நிறைவுற்றதை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையானது 04.06.2024 அன்று நடைபெற உள்ளது.

இதனைமுன்னிட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை பணிக்காக வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் - 102 நபர்கள், உதவியாளர்கள் - 102 நபர்கள்; மற்றும் நுண்பார்வையாளர்கள் - 102 நபர்கள் என மொத்தம் 306 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 22.05.2024 அன்று இந்திய தேர்தல் ஆணைய மென்பொருள் மூலம் முதல் கட்டமாக சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேற்படி 24. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்டமாக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு (மேற்பாh;வையாளா;கள் - 102 நபர்கள், உதவியாளர்கள் - 102 நபர்கள்; மற்றும் நுண்பார்வையாளர்கள் - 102 நபர்கள்) பயிற்சி வகுப்பானது திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (23.05.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேற்கண்ட நபர்களுக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை), நெடுஞ்சாலைகள்)பாலாஜியால் பயிற்சி வழங்கப்பட்டது.

மேற்கண்ட பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சீனிவாசன், அனைத்து சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை வருகிற நான்காம் தேதி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 May 2024 3:50 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு...
  2. திருவள்ளூர்
    பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...
  4. நாமக்கல்
    மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல...
  5. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து
  6. நாமக்கல்
    பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை
  7. நாமக்கல்
    வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
  8. இந்தியா
    என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
  9. நாமக்கல்
    ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. உலகம்
    ஜப்பானில் பரவும் சதை உண்ணும் பாக்டீரியாக்கள்! இரண்டு நாட்களில்...