கரூரில் ஆண், பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்

கரூரில் ஆண், பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்
X

கரூரில்  நடந்து வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஒரு காட்சி.

கரூரில் ஆண் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவங்கி நடந்து வருகிறது.

கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 64-வது அகில இந்திய எல்ஆர்ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் பெண்களுக்கான 10-வது கரூர் வைஸ்யா வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் 22-ம் தேதி தொடங்கியது. 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சி ஆர் பி எப். புதுடெல்லி -நார்தன் ரயில்வே புது டெல்லி ஆட்டத்தில் நார்தன் ரயில்வே 56- 44 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியன் நேவி லொனவாலா- டெல்லி மென் பி.பி.ஏ. அணிகள் விளையாடியதில் இந்தியன் நேவி அணி 75 -68 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

கஸ்டம்ஸ் புனே- டெல்லி மென் பி.பி.ஏ. அணிகள் ஆடிய ஆட்டத்தில் டெல்லி அணி 69- 61 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

பெண்களுக்கான ஆட்டத்தில் சென்ட்ரல் ரயில்வே அணியும், நார்தன் ரயில்வே அணியும் விளையாடின‌. இந்த ஆட்டத்தில் சென்ட்ரல் ரயில்வே அணி 55- 46 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

முன்னதாக போட்டிகளை கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா துவக்கி வைத்தார். துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாவட்ட கூடைப் பந்து கழக தலைவர் வி.என்.சி.பாஸ்கர், செயலாளர் எம்.முகமது கமாலுதீன், துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம், இந்திரமூர்த்தி, பாலசுப்பிரமணியன், பொருளாளர் அனீஸ் பெரியசாமி, இணைச் செயலாளர்கள் வெங்கடேசன், முகமது அமீன், மற்றும் முருகேசன், சுரேஷ், முத்துராமன், செந்தில் ராஜா, வேலுச்சாமி, வெங்கடேசன், ரவி, ஜீவா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!