/* */

நாமக்கல் நகர்மன்ற முதல் கூட்டத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம்

நாமக்கல் முனிசிபாலிட்டி நகர்மன்ற முதல் கூட்டத்தில், நகராட்சி பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் நகர்மன்ற முதல் கூட்டத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம்
X

நாமக்கல் முனிசிபாலிட்டி முதல் நகர் மன்றக் கூட்டத்தில், எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார். அருகில் முனிசிபாலிட்டி தலைவர் கலாநிதி, கமிஷனர் சுதா ஆகியோர்.

நாமக்கல் முனிசிபாலிட்டியின், நகர்மன்ற முதல் கூட்டம், சேர்மன் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் சுதா, வைஸ் சேர்மன் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில், நாமக்கல் நகராட்சி பகுதியில் முக்கிய இடங்களில், சிசிடிவி கோமராக்கள் பொருத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. நகராட்சி செலம்பக் கவுண்டர் பூங்கா பகுதியில், நகராட்சி சார்பில், தமிழக அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நகராட்சிக்கு தேவையான பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ஒப்பந்தக்குழு, நியமனக் குழு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. அதில் வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு, ஒப்பந்த மற்றும் நியமனக் குழு உறுப்பினர்கள் ஒட்டெடுப்பு நடைபெற்றது. இதில், நியமனக் குழு உறுப்பினராக சிவகுமார், ஓப்பந்தக்குழு உறுப்பினராக சரவணன், வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பி னர்களாக தனசேகரன். இந்திராணி, சரோஜா, நந்தினிதேவி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 39 நகராட்சி கவுன்சிலர்களும் போட்டியில் கலந்துகொண்டனர்.

Updated On: 1 April 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...