/* */

வேலைவாய்ப்பு மையத்தில் பதிவை புதுப்பிக்க கூடுதலாக 3 மாதம் சலுகை நீட்டிப்பு

வேலை வாய்ப்பு அலுவலக புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கூடுதலாக 3 மாதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு மையத்தில் பதிவை புதுப்பிக்க  கூடுதலாக 3 மாதம் சலுகை நீட்டிப்பு
X

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 2014, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலை வாய்ப்புக்கான பதிவுகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்கள் சிறப்பு புதுபித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையின்கீழ் புதுப்பித்தல் பெற விரும்பும் பதிவுதாரர்கள் வருகிற 2.03.2022 தேதிக்குள் தங்களது பதிவை ஆன்லைன் மூலம் டிஎன் வேலைவாய்ப்பு ஜிஓவி.இன் என் வெப்சைட்டில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வேலை வாய்ப்பு பதிவை, புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், பதிவினை புதுப்பித்திருக்க வேண்டிய காலம் 1.1.2014 முதல் 31.12.2019 வரை இருந்தால், இந்த சிறப்பு சலுகை அவர்களுக்கு பொருந்தும். ஆன்லைன் மூலமாக சலுகையின் கீழ் புதுப்பிக்க இயலாதவர்கள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு, பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, சாதிச்சான்று ஆகியவற்றுடன் நேரிலோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 1.03.2022-க்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்